சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு - மக்களவையில் வேலூர் எம்பி வைத்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பத்தாண்டுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று, மக்களவையில் விதி எண் 377 கீழ், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் அவர் பேசியதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு தான் நம் நாட்டின் கொள்கை உருவாக்கம், திட்டங்கள், சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான இலக்கு தலையிடுகளின் அடித்தளமாக உள்ளது. 

மேலும் இந்திய சமூகத்தில் சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை நிர்ணயிப்பதில், சாதிவாரியாக கணக்கிட செய்வது வரலாற்று ரீதியாக உள்ளது. அது குறித்த உண்மை தரவுகள் பொதுத்தளத்தில் கண்டறிய வேண்டியது அவசியம். 

கடந்த 9 தசாப்தங்களாக நம் நாட்டின் மக்கள் தொகை மாறுபட்டு இருந்தாலும். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினர். பின்தங்கிய பிரிவினர் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். 

சமூக நீதி, சமத்துவம் தொடர்பான அனைத்து அழுத்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண, தேசிய அளவில் சமகாலத் தரவுகள் திரட்டப்படுவது தேவையான ஒன்று. 

தமிழக முதலமைச்சர் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்படி எடுக்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் சாதி கட்டமைப்பு மற்றும் அதன் சமூக பொருளாதார குறியீடுகளின் பிரதிபலிப்பு பற்றிய விரிவான நம்பகமான தரவுகளை வழங்க முடியும். 

இதுதான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்யும். எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கதிர் ஆனந்த் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore MP In Lok Sabha Speech Census


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->