வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய விசாரணை கைதி மரணம்!  - Seithipunal
Seithipunal


வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி அனீஸ் அகமது (வயது 42) என்பவர் இன்று மாலை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் அனீஸ் அகமது.

இவர் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்த நிலையில், இன்று மாலை சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் இன்று அதிகாலை புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த மார்ச் மாதம், புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், விவேகானந்தன் சிறையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Pocso Culprit Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->