காலைலயே இரு மாவட்ட மக்களை பதற வைத்த சம்பவம்! மக்களே உஷார்!
Vellore Sivagangai GOLD Theft
சிவகங்கை மாவட்டம், கருவியப்பட்டி கிராமத்தில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிர்வாக குழு தலைவராக உள்ள சேதுராமன் என்பவர் வீட்டில் வைத்திருந்த கோயில் நகைகள் மற்றும் அவரது வீட்டு நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
மேலும், தங்க நகைகளுடன் வெள்ளி சாமான்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
சேதுராமன் வீட்டின் அருகே உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றுள்ளது.
இதேபோல், வேலூர் மாவட்டம், பாகாயத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 50 சவரன் திருடப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து திருடியதாக தனது மருமகன் மீது சாலமன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சொந்த வீட்டிலேயே மருமகன் திருடியதாக மாமனார் அளித்த புகார் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இன்று காலையிலேயே சிவகங்கை மற்றும் வேலூரில் நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான விசேஷங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள், அக்கம்பக்கத்தினர் தெரிவிப்பதுடன், காவல் நிலையத்தில் எங்கே போகிறோம், எப்போ வருகிறோம் என்பது குறித்து தெரிவித்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vellore Sivagangai GOLD Theft