வேலூரில் காதல் மனைவியை மதம் மாற்ற முயன்ற கணவன் கைது! - Seithipunal
Seithipunal


வேலூர் : சின்ன அல்லாபுரத்தை சேர்ந்தவரும், கஸ்பா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும், 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மத வேறுபாடுடையவர்கள். 

இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில், அந்த பெண்ணின் கணவர் தற்போது தனது மதத்திற்கு மாற வேண்டும் என காதல் மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். 

இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை அதிகரித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மனைவியை கணவர்  தாக்கியுள்ளார்.  

இதனால், ஆத்திரமடைந்த மனைவி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில், தனது கணவர் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயல்வதாக புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் வேலூர் தெற்கு போலீசார், கணவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore wife convert to cast forcing husband arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->