வேங்கைவயல் விவகாரம்; சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும்.. விஜய் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


வேங்கை வயல் விவகாரத்தில் ஐகோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

 இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-"வேங்கை வயல் விவகாரத்தில் ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்றும்  வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன என கூறியுள்ளார் .

மேலும் , குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட விஜய் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும்  அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும் என கூறியுள்ளார்.

மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது என்றும் ஒன்றிய அரசின் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும் என்றும்  இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது என விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vengaivayal affair There should be a Special Investigation Team (SIT) probe Vijay's insistence 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->