முதல் முறையாக சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி..! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளில் உள்ள, 2,207 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்ரவரியில், கணினி வழி தேர்வு நடந்தது. ஆசிரியர் பதவியில், 3,236 பேரை நியமிக்க, முதல் முறையாக, 7,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்றுள்ளது. 

இந்த தேர்வில், 2.5 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் ஜூலையில் வெளியானது. பின், இந்த தேர்வின் வழியே நியமிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 3,236 ஆக உயர்த்தப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தரவரிசை பட்டியல் வெளியானது. இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, முதல் கட்டமாக ஆன்லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

இதையடுத்து, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் தேர்வர்களின் அசல் சான்றிதழ்களை நேரடியாக சரிபார்க்கும் பணி, இம்மாதம், 2ம் தேதி, துவங்கியது. இந்த பணிகளை மேற்கொள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, அவசர ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பு மருத்துவர் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு, தேர்வர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தப் பணி, டி.ஆர்.பி., தலைவர் லதா தலைமையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி துறையை சார்ந்த, 400 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். டி.ஆர்.பி., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, மூன்று நாட்களில் 7,000 பேருக்கு, நேரடியாக அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன.

நேற்றுடன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்ற நிலையில், ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோருக்கு, இதுவரை மாவட்ட கல்வி அலுவலகங்களே சான்ரிதழ்களை சரிபார்த்து வந்தனர். ஆனால், முதல் முறையாக டி.ஆர்.பி., சார்பில் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., சார்பில் கணினி வழி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

verify certificate at first time


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->