தமிழகம்: விடுதலை புலிகள் ஆதரவாளரை கைது செய்த என்ஐஏ!
viduthalai puligal NIA Officers investigation
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 13 இலங்கை நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம், மங்களூர் பகுதியில் நுழைந்ததாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இவர்கள் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து, ரயில் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழியாக மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.
13 பேரில், 10 பேர் மீது மங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ஏழு பேரை கைது செய்துள்ள நிலையில், மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தத சீனிஆபுல்கான் என்பவர் தான் இவர்களை அனுப்பி வைத்ததாகவும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் விசாரணையில் வெளியான தகவலின் படி, இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்க போலி ஆவணங்களை, இந்த ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட, விடுதலை புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் சீனி ஆபுல்கான் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
viduthalai puligal NIA Officers investigation