சென்ற இடமெல்லாம் சொத்து குவிப்பு...  நீலகிரியில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு!! - Seithipunal
Seithipunal


இந்து அறநிலையத்துறையில் பணிபுரியும்  நில ஆய்வாளர் தங்கியிருக்கும் விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில்  நில துணை ஆய்வாளராக பணிபுரிந்த பாஸ்கர் என்பவர், வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 2 கோடி  வரை சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டது. நில துணை ஆய்வாளராக பணிபுரிந்த பாஸ்கர்,   பதவி உயர்வு பெற்று நீலகிரி, குன்னூரில் இந்து அறநிலையத்துறையில்  நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

மேலும் இவருக்கு கூடுதல் பொறுப்பாக  குந்தா, கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். 

இதையடுத்து   லஞ்ச லஞ்ச ஒழிப்புத்துறையினர்,  காஞ்சிபுரம், மற்றும் இவருக்கு சொந்தமான இடங்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vigilance raid at ooty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->