விஜய் மக்கள் இயக்கம் புறக்கணித்த மாணவி நேத்ரா தமிழகத்தில் முதலிடம்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் திறமையும், தகுதியும் இருந்தும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினரால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுதொண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 598 மதிப்பெண் எடுத்தும் விஜய் மக்கள் இயக்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டார். 

இந்த நிலையில் இன்று பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  வெளியிட்டார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நேத்ரா  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் தமிழகத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal iyakkam boycotted student Nedra tops in TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->