சாபம் விடுறதுக்கு நீங்க உத்தமரா? - சீமானை விளாசிய விஜயலட்சுமி.! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது, பேசிய விஜய் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசினார்.

இதைதொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, "விஜய் சொல்வது கொள்கை அல்ல கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை" என்று பேசியுள்ளார். 

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறி வரும் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "என்ன மிஸ்டர் சீமான். சாபம் கொடுக்குறீங்க விஜய் அண்ணாவ லாரி மோதி செத்துற போறனு சொல்றீங்க சாபம் விடுறதுக்கு நீங்க உத்தமரா? பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை.

முதல்ல உங்க கட்சியில இருக்குற ஓட்டையை அடையுங்க.. நிறைய ஓட்டை இருக்கு. உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க. திருச்சி சூர்யா உங்ளோட நிர்வாண வீடியோவ வெளியிட்டு மானத்தை வாங்கப்போகிறாராம். அதைப்போய் பாருங்க..

அண்ணன் விஜய் ஆகட்டும்; அல்லது திமுக ஆகட்டும்; கொள்கை ரீதியாக தானே தவறு பண்ணி இருக்காங்க அப்படின்னு நீங்க தான் சொல்லிட்டு இருக்கீங்க. கொள்கை ரீதியா தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா, எங்கள மாதிரி பெண்களோட வாழ்க்கைய சீரழிச்சு எங்கள நடுரோட்டில் விட்ட நீங்க எது அடிச்சு சாவமாட்டீங்க?

தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்" என்று ஆவேசமாக பேசியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayalakshmi speech about seeman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->