விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: டெபாசிட் இழக்கும் 27 வேட்பாளர்கள்!
Vikaravandi By Poll result 2024 PMK vs DMK vs NTK
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் அ.சிவா, பாமக சி.அன்புமணி, நாதக பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதுவரை 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது.
இதில், திமுக வேட்பாளர் சிவா 77,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும் சுமார் 50 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 33 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 6422 வாக்குகளை பெற்றுள்ளார்.
தற்போதைய இந்த நிலவரப்படி திமுக மற்றும் பாமக தங்களது டெபாசிட் தொகையை பெறுவதற்கான வாக்குகளை பெற்றுவிட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா டெபாசிட் இழப்பார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதில், முதல் 6 சுற்றுகளில் மட்டுமே பாமக சற்று குறைந்த வாக்குகளை பெற்றது. அடுத்தடுத்த சுற்றுகளில் பாமக கணிசமான வாக்குகளை பெற்று வருகிறது. கடந்த 2016 பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகளை பாமக பெற வாய்ப்புள்ளது.
English Summary
Vikaravandi By Poll result 2024 PMK vs DMK vs NTK