விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில்,வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

மூன்று நாட்களுக்கான உணவுப் படியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று, வாக்கு எந்திரங்களை எடுத்து செல்லும் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, ஒரே தவணையாக பணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர்.

இதனையடுத்து, வாக்கு எந்திரங்களை பாதுகாப்பாக அந்தந்த வாக்குசாவடிக்களுக்கு எடுத்து செல்ல வாகன ஓட்டிகள் சம்மதம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். 

276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

பதற்றமான வாக்கு சாவடி 45 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikkravandi By Election update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->