விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நல்லவேளை நாங்க தப்பித்தோம்! பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் அ.சிவா, பாமக சி.அன்புமணி, நாதக பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதுவரை 3 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இதில் திமுக வேட்பாளர் 24 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாமக, நாதக வேட்பாளர்கள் இரண்டு, மூன்று இடங்களில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலை புறக்கணித்து குறித்து அதிமுக ஐடி விங்க் செயலாளர் ராஜ் சத்யன் தெரிவிக்கையில், "பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலங்களை கேட்டபின்பும், 

தேசியக் கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலை தலைநகரிலேயே நடந்தபின்பும், பல்வேறு கடத்தல், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கற்ற அவலங்களை பார்த்த பின்பும், 

ஒழுங்கில்லாத சாலைகள் ,ஓடாத பேருந்துகள் ,  முற்றிலும் இல்லாத நிர்வாகம் என்பதை அனுபவித்த பின்பும், மக்களை மிரட்டி, மக்களை பட்டியில் அடைத்து , சுற்றுலா கூட்டி சென்று, 

இந்த அலங்கோல விடியா திமுக ஆட்சியில் இடைத்தேர்தல்களின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை அன்றே கணித்த அரசியல் சாணக்கியர் “புரட்சித்தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி.

இலக்கு 2026 , மற்ற அனைத்துமே… Just a Distraction!" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election 2024 ADMK raj sathyan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->