விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி மையத்தில் பெண்ணிற்கு கத்திக்குத்து! பெரும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கத்திக்குத்து நடந்துள்ளது.

கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற பெண்ணின் முன்னாள் கணவர் ஏழுமலையை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து வெளியான முதற்கட்ட தகவலின்படி, T-கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழியின் (வயது 49)  முன்னாள் கணவர் ஏழுமலை (வயது 52), திடீரென கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த போலீசார் ஏழுமலையை பொதுமக்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த கனிமொழியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது. 

இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election Crime Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->