சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைதேர்தல் ! வேட்பு மனு  தாக்கல் நிறைவு ! 64 பேர் வேட்புமனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைதேர்தலுக்கான வேட்பு மனு  தாக்கல் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுக புகழேந்தி சமீபத்தில் மறைந்தார். அதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் மக்களவை தேர்தலுடன் நடைபெறவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் ஏழாம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி இடத்ததற்கான நிறைவடைந்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட 64 பேர் போட்டியிட வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விக்கிரவாண்டி இடை தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கும் திமுக விற்கும் நேரடி போட்டி நிலவுகிறது. 

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நடைபெற்று ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election Nomination Submission Completed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->