''விக்கிரவாண்டி இடைத்தேர்தல்'' வேட்புமனு தாக்கல் எப்போது? முழு விவரம்.! - Seithipunal
Seithipunal



விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்படுகிறது. 

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி வருகின்ற 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் வருகின்ற 24-ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி மாலைக்குள் வேட்பு மனுவை திரும்ப பெறலாம். 

இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மீட்பு மனுவை விக்கிரமா விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் அனுமதி இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் விதமாக அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikravandi constituency by election nomination date


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->