#சற்றுமுன் || விழுப்புரத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
Vilupuram School Student Suicide
விழுப்புரம் அருகே 12 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் போகும் கடைசி மாணவி நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை, மாங்காடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக, மூன்று பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் (பள்ளி மாணவி - சிறுமி என்பதால் அவரின் பெயர் மறைக்கப்படுகிறது), தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 வயதாகும் அந்த பள்ளி மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Vilupuram School Student Suicide