#விழுப்புரம் || காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரதீபா. இவர்கள் கடந்த ஜூன் 13 -ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் விழுப்புரம் சென்றுள்ளனர். அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளனர். பின்னர், இரவு 11.30 மணிக்கு பிரதீபாவுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் புட் பாய்சன் என்று கூறியுள்ளார். அவரை மேல் சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கஞ்சனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram young lady mystery dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->