மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் நினைவு தினம்..!!
viramamunivar memorial day 2022
வீரமாமுனிவர் :
மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார்.
இவர் இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் மற்றும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார்.
இவர் இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியுள்ளார். இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார் மற்றும் ஒன்பது மொழிகளிலும் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.
English Summary
viramamunivar memorial day 2022