வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவல்.. விருதுநகர் நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. வரிச்சியூர் செல்வமும் அவரது கூட்டாளியான செந்திலும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த செந்தில் காணாமல் போனதாக அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் அழைப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விருதுநகரில் வைத்து ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். பிறகு விருதுநகர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய வரிச்சியூர் செல்வத்தை போலீசார் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக வரிச்சியூர் செல்வத்தை இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வரிச்சியூர் செல்வத்தை 5 நாட்கள் போலீஸ்காவில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar court orders 5days police custody for Varichiyur Selvam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->