பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட திருமுதுகுன்றம் - விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், விருதாச்சலம் மணிமுத்தாறு மேற்கு கரையில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது.

விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு 'பழமலைநாதர்' என்ற பெயரும் உண்டு. பிரம்மதேவனும், அகத்தியர் வழிபாடு செய்த இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் கொண்ட சிறப்பு மிக்கதாகும்.

மேலும் முந்தைய காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சி அளித்ததால் இவருக்கு முதுகுன்றீஸ்வரர் என்ற பெயரும், இதனால் இந்த விருதாச்சலத்தின் பண்டைய கால பெயர் 'திருமுதுகுன்றம்' என்றும் இருந்துள்ளது.

இத்தல அம்பாளின் திருநாமம் 'பெரியநாயகி' என்பதால் விருத்தாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இளமையாக காட்சி அளிப்பதால் குரு நமச்சிவாயர் பாலாம்பிகை, இளைய நாயகி என்ற பெயரும் உண்டு.

புண்ணிய தலமாகவும், முக்தி தளமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. 

இவ்வ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் மகா கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருள் மழையின் நனைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthachalam viruthikirishwarar temple kumpavishgam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->