விருதுநகர் | தக்க சமயத்தில் ஆம்புலன்ஸ் வராததால் பறிபோன உயிர்! கொந்தளிக்கும் கிராம மக்கள்! - Seithipunal
Seithipunal


விருதுநகர், முத்தநேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60) இவரது மனைவி குணசுந்தரி (வயது 55) இவர் நேற்று காலை நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்குச் சென்ற போது இவரை பாம்பு கடித்துள்ளது. 

இதனை அறியாத குணசுந்தரி அவரது உடல் முழுவதும் விஷம் பரவி மயக்கமடைந்தார். இருப்பினும் அவர் சுய நினைவுடன் இருந்தார் அதற்குப் பின்னர் தன்னை பாம்பு கடித்துள்ளதாக உணர்ந்து அவரது கணவரிடம் தெரிவித்துள்ளார். 

உடனடியாக அவரது உறவினர்கள் குணசுந்தரியை மீட்டு ஆட்டோ மூலம் நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அவருக்கு அங்கு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது குணசுந்தரி சுய நினைவுடன் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். 

அதற்காக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவசர ஊர்தி வாகனம் வருவதற்கு தாமதமானதால் சுமார் 1 மணி நேரம் குணசுந்தரி காத்திருந்த நிலையில் அவர் உடல் முழுவதும் விஷம் பரவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை பார்த்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கக்கூட மருத்துவர்கள் இல்லாததால் குணசுந்தரி இறந்து விட்டதாக கணவர் மற்றும் உறவினர்கள் கோபமடைந்து மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மனித உயிர்களை காக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar ambulance arrival delay woman died 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->