விருதுநகர் | கணவன் வரதட்சனை கேட்டதால் மனைவியின் ஆத்திர செயல்! பெற்றோர்கள் தவிப்பு! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் அருகே வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்தவர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

லட்சுமிக்கும் ராஜபாளையம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயம் செய்து திருமணம் நடைபெற்றது. 

திருமணத்தின் போது பெண் வீட்டார் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சனையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு இருசக்கர வாகனம் வேண்டும் என, லட்சுமியை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. 

ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் இருசக்கர வாகனம் வாங்கி தரமுடியாது என லட்சுமி தெரிவித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இது குறித்து லட்சுமி அவரது தந்தை பொன்னையாவிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் ஆறுதல் தெரிவித்த நிலையில், லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்து  மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

இந்த நிலையில் சேத்தூர் கவல நிலையத்தில் பொன்னன் புகார் அளித்ததில், எனது மகள் லட்சமி சாவில் மர்மம் உள்ளது. எனவே விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லட்சமி வரதட்சணை பிரச்சினையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar husband asked dowry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->