செங்கோட்டை அதிவேக ரெயிலில் பயணிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


செங்கோட்டை அதிவேக ரெயிலில் பயணிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் - நடந்தது என்ன?

செங்கோட்டையில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, திருவாரூர் வழியாகச் சென்னைக்கு ஏசி ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயிலில் ஏசி பெட்டியில் பயணித்த பயணிகள், ஏசி சரியாக வேலை செய்யாததால் வாந்தி, மயக்கம் வருவதாக ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரெயில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டது. உடனே ரயில்வே ஊழியர்கள் விரைந்துச் சென்று பார்த்தபோது,  ஏசியிலிருந்து குறைந்த அளவே குளிர் வெளியானது தெரியவந்தது.

ஆனால், ரெயில்வே ஊழியர்கள் இதனை இங்கு சரிசெய்ய முடியாது. திருவாரூரில் இதற்கான பணியாளர்களைத் தயாராக இருக்கச் சொல்லி இருக்கிறோம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட பயணிகள் தங்களால் அந்தப் பெட்டியில் அமர்ந்து பயணிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படாததால், அதிகமான சத்தத்துடன் ஊழியர்கள் ஹாரன் அடித்துள்ளனர். உடனே பயணிகள் ரயிலில் ஏறினர். 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்ட ரெயில், ஏசி சரி செய்யப்படாமலேயே திருவாரூர் நோக்கிப் சென்றது. இது தொடர்பாக பயணிகள் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vomiting and fanting to passengers in train


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->