தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி.. எந்தத் தொகுதியில், எவ்வளவு வாக்குகள்? முழு லிஸ்ட் இதோ - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 18-வது மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில் 9:00 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 12.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது 11 மணி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் 11 மணி நிலவரப்படி 30% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 23.72% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் திருச்சியில் 22.77% வாக்குகளும், நாமக்கல்லில் 29.72% வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 29.49% வாக்குகளும், மதுரையில் 22.35% வாக்குகளும், சிதம்பரத்தில் 23.45% வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

அதேபோன்று  திருப்பூரில் 22% வாக்குகளும், தேனியில் 25.75% வாக்குகளும், நாகையில் 22.05% வாக்குகளும், மயிலாடுதுறையில் 23.01% வாக்குகளும், திண்டுக்கல்லில் 25.85% வாக்குகளும், வேலூரில் 23.46% வாக்குகளும், கிருஷ்ணகிரியில் 23.97% வாக்குகளும், தர்மபுரியில் 23.04% வாக்குகளும் பதிவாகி உள்ளது. 

மேலும் திருவள்ளூர் தனி தொகுதியில் 22.9% வாக்குகளும், வடசென்னையில்‌16.37% வாக்குகளும், மத்திய சென்னையில் 15.8% வாக்குகளும், தென் சென்னையில் 17.71% வாக்குகளும், ஸ்ரீபெரும்புதூரில் 17.07% வாக்குகளும், நீலகிரி தனித் தொகுதியில் 21.69% வாக்குகளும், பெரம்பலூரில் 28.81% வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

அதேபோன்று நாமக்கல்லில் 29.72% வாக்குகளும், சேலத்தில் 28.57% வாக்குகளும், ஈரோடு 28.29% வாக்குகளும், கரூரில் 28.92% வாக்குகளும், அரக்கோணத்தில் 26.38% வாக்குகளும், ஆரணியில் 26.3% வாக்குகளும், சிவகங்கையில் 19.16% வாக்குகளும், கோவையில் 23.1 வாக்குகளும், விருதுநகரில் 23.11 வாக்குகளும், ராமநாதபுரத்தில் 25.92% வாக்குகளும், திருப்பூர் 25.47% வாக்குகளும், பொள்ளாச்சி 25.02% வாக்குகளும், தஞ்சாவூர் 24.96% வாக்குகளும், திருவண்ணாமலை 24.92% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அதேபோன்று திருநெல்வேலியில் 23.7% வாக்குகளும், தென்காசியில் 24.5% வாக்குகளும், அரக்கோணத்தில் 24.71% வாக்குகளும், கன்னியாகுமரியில் 24.68% வாக்குகளும், திருவாரூரில் 24.93% வாக்குகளும் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote polling percentage in Tamilnadu at 11 oclock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->