வக்பு வாரியத் திருத்த மசோதா தாக்கல்: பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவசர கடிதம்!
Waqf Board Amendment bill PM Modi TNCM MK Stalin letter
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரின் அந்த கடிதத்தில், 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது. 1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது என குறிப்பட்டுள்ளார்.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதனால், பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
English Summary
Waqf Board Amendment bill PM Modi TNCM MK Stalin letter