கலைஞர் மறைவுக்கு விஜயகாந்தான் காரணம்? புயலை கிளப்பிய திமுக முக்கிய புள்ளி !! - Seithipunal
Seithipunal


திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேமுதிக தலைவரும், நடிகருமான  விஜயகாந்த்  "அண்மையில் மரணமடைந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், யாரையும் கேட்கமாலேயே விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

பிரேமலதா உட்பட எவரும் கேட்கவில்லை. ஆனால், தானாகவே 'அரசு மரியாதை செய்யப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஸ்டாலின் விஜயகாந்துக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  ஆனால் கடந்த 2016-ஆம் விஜயகாந்த் என்கிற கனி, மரத்தில் இருக்கிறது. நிச்சயமாக அந்தக் கனி என் மடியில்தான் விழும்' என்று மிகுந்த உருக்கத்தோடும் பெருந்தன்மையோடும்  கூட்டணிக்கு அவரை கலைஞர் அழைத்தார். 

ஆனால், கூட்டுச் சேர மறுத்துவிட்டு தனியாக நின்றார். அன்றைக்கு மட்டும் அவர் தனியாக நிற்காமல் நம்முடைய கூட்டணியில் இருந்திருந்தால், கலைஞர் ஒரு முதல்வராகவே மறைந்திருப்பார். இன்னும் சொல்லப்போனால், அவர் மறைந்திருக்கவே மாட்டார். அவருக்கு முதல்வர் பதவி 2016-இல் கிடைத்திருந்தால், அந்த தெம்பிலேயே அவர் வாழ்ந்திருப்பார்.

இன்னும் ஒருபடி மேலேபோய்ச் சொல்ல வேண்டும் என்றால் அதிமுக பொதுச்சயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாகூடச் இறந்திருக்க மாட்டார்.  கலைஞர் முதலமைச்சர் ஆகியிருந்தால், ஜெயலலிதா அந்நேரம் அமெரிக்காவுக்குச் சென்று உடல்நிலையில் கவனம்செலுத்தி இருப்பார். என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ எல்லாத்தையும் செய்திருப்பார். அவரும் உயிரோடு இருந்திருப்பார்.

அதேபோல், விஜயகாந்த்தும் இறந்திருக்க மாட்டார்.  அவரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து இன்றும் நமக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருப்பார். விஜயகாந்த் எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்தார். 

முதலமைச்சராக இருந்து மறைய வேண்டிய கலைஞரை ஒரு எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லாத நிலையில் அவரை மறையச் செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த். இவ்வாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Was Vijayakanth responsible for the death of the artist? The main point of DMK that created a storm !!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->