அடிபம்பில் தானாகவே தண்ணீர் வந்த சம்பவம் - நாகையில் அதிர்ச்சி.!!
water coming automatic on pipe in nagai
அடிபம்பில் தானாக தண்ணீர்வே வந்த சம்பவம் - நாகையில் அதிர்ச்சி.!!
மனிதன் முதலில் ஆறு, ஓடை, ஏரி, குளத்திலிருந்துதான் தண்ணீரை பயன்படுத்துவார்கள். அதன் பின்னர் குழாய் மூலம் அடிபம்பு அமைத்து அதனை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
இந்த அடிபம்பை அடிப்பதன் மூலம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் உண்டாகும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பல மின்மோட்டார்கள் உண்டானாலும் அடிபம்புக்கென தனி மவுசு உண்டு.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள அடிபம்பு ஒன்றில் அடிக்காமலேயே தானாகவே தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நாகைமாவட்டத்தில் உள்ள சட்டயப்பர் கோவில் தெருவில் உள்ள அடி பம்பில் தானாகவே தண்ணீர் ஊற்றுவதை அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோடைவெயிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அடிபம்பில் தானாகவே தண்ணீர் வெளியாகி வருவது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக விசாரணை செய்த போது நகராட்சி குடிநீர் குழாயில் திருகு பைப்பிற்கு பதிலாக அடிபம்பில் இணைப்பு கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
English Summary
water coming automatic on pipe in nagai