அப்படியா!!!மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து!!! காரணம் என்ன?
water flow in Mettur Dam is increasing
கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.இந்நிலையில் தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது.
இதில் அணைக்கு நேற்று வினாடிக்கு 1073 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1235 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
இதுவரை அணையிலிருந்து குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
English Summary
water flow in Mettur Dam is increasing