அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளதாகவும், இன்று ஐ.சி.யூ.வில் இருந்து அவர் தனி அறைக்கு மாற்றப்படுவார் என்றும், டாக்டர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில், நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து 36 மருத்துவகல்லூரி, 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படிப்படியாக டேக் அறிமுகம் செய்யப்படும் என்றும், பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக் பொருத்தப்படும். சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மருத்துவமனைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்துவது, மின்விளக்குகளை உறுதி செய்வது, ஒப்பந்த பணியாளர்களின் வருகை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்வது உள்ளிட்டவை படியாக கொண்டு வரப்படும் என்றும்,  நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு டேக் கட்டுவது அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What are the safety measures in government hospitals minister m subramanian sensational explanation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->