டெல்லியில் என்ன நடந்ததோ அது புதுச்சேரியில் நடக்கும்..ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
What happened in Delhi will happen in Puducherry. RS Bharathi Talks
ஒரே கூட்டம், ஒரே பேச்சில் பாராளுமன்ற தேர்தலில் நமச்சிவாயத்தை காலி செய்தார் தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின்என திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்..
புதுச்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதிஒரே கூட்டம், ஒரே பேச்சில் பாராளுமன்ற தேர்தலில் நமச்சிவாயத்தை காலி செய்தார் தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் .
தளபதி புதுச்சேரி வரவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை கூட்டணிக் கட்சியினர் தெரிந்துகொள்ள வேண்டும்.2026 ஆம் ஆண்டு தேர்தல் புதுச்சேரியில் என்ன நடக்கும் என்று நாடு உற்று நோக்குகிறது இதேபோல் புதுச்சேரியில் திமுக வலுவாகவும் உள்ளது.
மாகி & ஏனாம் தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 28 தொகுதிகளிலும் ஜெயிக்க கூடிய நிலையில் செல்வாக்கு திமுகாவிற்கு உள்ளது.
கூட்டணி கட்சியினரை தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அந்த வகையில் எல்லோரும் நடந்து கொள்வது நல்லது, அவசரப்பட்டு அறிக்கை விட்டால் அதற்கு பதில் அறிக்கை திமுக விட்டால் டெல்லியில் என்ன நடந்ததோ அது நடக்கும், இதற்கு மேல் யாருக்கும் அறிவுரை கூற அவசியம் இல்லை.
டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருந்தால் பாஜக ஆட்சி வந்திருக்காது.திமுக யாருக்கும் பயந்தோ, நடுங்கிப் போன கட்சி கிடையாது ஆனால் கட்சிக்காரனின் சுயமரியாதையை யாராவது சோதித்தால் அதனை திமுக விட்டுக் கொடுக்காது என திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
English Summary
What happened in Delhi will happen in Puducherry. RS Bharathi Talks