யார் அந்த  ஐய்யாசாமி ..? பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்வாரா..? - Seithipunal
Seithipunal


நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்கை முடிவு எடுத்து அனைத்து அரசு துறை தற்காலிக ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்கை முடிவு எடுத்து அனைத்து அரசு துறை தற்காலிக ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது கடந்த 2023 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு செய்த பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டு சம்பளமாக ரூபாய் 18000/-  வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யாசாமி வழக்கின் தீர்ப்பினை காரணம் காட்டி காலம் கடத்தாமலும் தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்கை முடிவு எடுத்து அனைத்து அரசு துறை தற்காலிக ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுதேசி மில் அருகில் போராட்டம் செய்தனர்.

மேலும் போராட்டத்தில் யார் அந்த  ஐய்யாசாமி ..? பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்வாரா..? அட்ரஸ் இல்லா அய்யாசாமியை காவல்துறை புலன் விசாரணை செய்து கண்டுபிடித்து கொடுக்க வலியுறுத்தி நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன் காரைக்கால் வினோத் சத்யாவதி காரைக்கால் மணிவண்ணன் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who is that Ayyasamy Will the Public Works Minister answer


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->