திண்டுக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம் : உயிரிழந்த கணவரின் உடலுறுப்புகளை தானம் செய்த மனைவி.!
wife donate died husband organs in dindukal
திண்டுக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம் : உயிரிழந்த கணவரின் உடலுறுப்புகளை தானம் செய்த மனைவி.!
திண்டுக்கல் மாவட்டம் மேல ராமநாதபுரத்தில் உள்ள முனியப்ப கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவர் கடந்த எட்டாம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பாண்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு பாண்டி மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு கதறி அழுத பாண்டியின் மனைவி கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்தார். இதைத் தொடர்ந்து பாண்டியின் கல்லீரல், கருவிழிகள், சிறுநீரகங்கள், இருதய வால்வு உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த கணவரின் உடல் உறுப்புகள் மனைவியின் பெருந்தன்மையால் உயிர் வாழ காத்திருக்கும் பலருக்கு தானம் செய்யப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
wife donate died husband organs in dindukal