குடிகார கணவன்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இருவரும் தொலைகாட்ச்இ தொடர்களில் நடித்து வருகின்றனர்.குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி குடிபோதையில் வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது விட்டதாக காவல்துறையினருக்கு விஜயா தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டனர்.  பிரேதபரிசோதனை அறிக்கையில் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, காவல்துறையினருக்கு விஜயா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது.  அவர் அளித்த வாக்குமூலத்தில்,  கணவர் குடித்துவிட்டு தினமும் வந்த தகராறில் ஈடுப்படுவார் எனவும்  சம்பவதன்று,  குடித்துவிட்டு அவரை தாம்பத்தியத்திற்கு அழைத்ததாகவும் அதனால், ஏற்பட்டதில் அவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.

அதன்பின்,  காவல்துறையினருக்கு தகவல் அளித்தாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife Kills His Husband in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->