தூத்துக்குடி || கடித்த பாம்பை கையோடு கொண்டு வந்த பெண் - அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதலூர் பகுதியைச் சேர்ந்த அழகுராணி என்ற பெண், தன்னை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி, முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 

அப்போது, அவர் தன்னை கடித்த பாம்பு என்று கூறிக்கொண்டே ஒரு பிளாஸ்டிக் பையில் பாம்பை கொண்டு வந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சிக்குள்ளான மருத்துவமனை ஊழியர்கள், பாம்பு உயிருடன் இல்லை என்பதை அறிந்து நிம்மதியடைந்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் அந்தப் பாம்பை வாங்கி, அது என்ன வகையான பாம்பு என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். 

அதன் பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman addmitted hospital for snake bit in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->