உறவுக்காரர்போல் நடித்து திருமண மண்டபங்களில் கைவரிசை காட்டிய பெண் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் உறவுக்காரர் போல் நடித்து நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சத்தியமூர்த்தி. இவரது மகன் திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. அப்பொழுது உறவுக்கார பெண் என்று கூறி மணமகள் அழைத்துச் சென்றவர் 15 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார்.

மேலும் இதேபோல் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் திருமணத்தின் போது உறவுக்காரர் போல் நடித்து பெண் ஒருவர் 11 பவுன் நகையை கொள்ளை அடித்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்த வேப்பம்பட்டு பகுதியை சார்ந்த சாந்தி என்பவர் தான் திருமண மண்டபங்களில் திருடியது தெரியவந்துள்ளது. மேலும் சாந்தி திருடிய நகைகளை எல்லாம் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4.50 லட்சத்துக்கு அடகு வைத்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சாந்தியை கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman arrested for stealing jewelery from wedding halls in Tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->