கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,  மறவன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லிசா  (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி மன உளைச்சலில் லிசா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104 
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue Near Kaniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->