பெரும் சோகம்! தனியார் நிறுவன விளம்பர பலகை! கீழே விழுந்து பெண் பலி! - Seithipunal
Seithipunal


சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் இரும்பு விளம்பர பலகை விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் அடுத்த கொட்டிபக்கத்தில் வசித்து வருகின்றனர். விஷ்ணு தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ரேணுகா சென்னை தரமணி 100 அடி சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு மாதங்களாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் ரேணுகா பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. தனியார் நிறுவன வளாகத்தில் வைத்திருந்த இரண்டு இரும்பு விளம்பர பலகையில் காற்றின் வேகத்தில் வந்த வழியாக நடந்து சென்றதுகொண்டிருந்த ரேணுகா விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரேணுகாவுக்கு வயிறு, இடுப்பு, எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக நிறுவன ஊழியர்கள் ரேணுகாவை மீட்டு ஆம்புலன்ஸ் உதவி உடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman died after an iron advertisement board fell due to heavy rain in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->