கடலூர் || வாக்கு செலுத்தும் போது தகராறு - 11 பேர் தாக்கியத்தில் பெண் பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், மனைவி கோமதி, மகன்கள் ஜெயபிரகாஷ், சதீஷ்குமார், தம்பி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மாலை வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர். 

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த பதினொன்று பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் மரக்கட்டையால் அவர்களை தாக்கியதில் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதில், கோமதி மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் கோமதி உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த முன்விரோதம் காரணமாகவும், வாக்களிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாகவும் பதினொன்று பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

முன் விரோதம் காரணமாக கணவன் கண் முன்னே மனைவியும், மகன்கள் கண் முன்னே தாயையும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died and four peoples injured in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->