கோவை : நீதி மன்ற வளாகத்தில் ஆசிட் வீசபட்ட பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை : நீதி மன்ற வளாகத்தில் ஆசிட் வீசபட்ட பெண் உயிரிழப்பு.!

கேரள மாநிலத்திலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்தவர்கள் சிவக்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களில் கவிதா கடந்த 2016-ம் ஆண்டு பேருந்தில் பயணம் செய்யும் போது ஒரு பெண்ணிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து கவிதாவிற்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவக்குமார் கவிதாவைக் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கவிதா, கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டுச் சென்றதனால் அவர் மீது சிவக்குமாருக்கு கோபம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் கவிதா வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி கோவை நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்துள்ளார். இதையறிந்த சிவக்குமார் நீதிமன்றத்திற்கு வந்து கவிதாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு கவிதா மறுப்புத் தெரிவித்ததனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது வீசியுள்ளார். இதில் கவிதா பலத்த காயமடைந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் கவிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிவக்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died for acid attack in coimbatore court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->