தூங்கி எழுந்து வந்த பெண் - வீட்டில் வெளியே காத்திருந்த பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சோழவரம் எல்ஜி நகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூலி வேலை செய்து தனியாக வாழ்ந்து வந்த மேரி இன்று காலை தூங்கி எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். 

அப்போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து மேரி மீது விழுந்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனே சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உதவியோடு மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died for electric shoct attack in chennai sozhavaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->