தவறான சிகிச்சையால் பறிபோன பெண்ணின் உயிர் - ஆத்திரத்தில் உறவினர்கள் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர்கள் அஜித்-சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகின்ற நிலையில், சுகன்யா கர்ப்பிணியானதையடுத்து முதல் ஐந்து மாதம் புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். 

இதற்கிடையே சுகன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள WCF என்ற தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பிரசவத்தை பார்த்து கொள்ளலாம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே அவர் தன் பிரசவத்தின் போது கணவரும் உடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அஜித் தனது மனைவி சுகன்யாவை கடந்த நான்கு மாதமாக WCF மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்று வந்த நிலையில், அங்கேயே மனைவிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இந்த நிலையில், கடந்த 16ம் தேதி அஜித்தின் மனைவி சுகன்யாவிற்கு பிரசவவலி ஏற்பட்டு WCF மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் சுகன்யாவுக்கு சில மருந்துகளை ஊசியில் செலுத்திய பின்பு சுகன்யாவிற்கு திடீரெனெ வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சுகன்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். 

அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், சுகன்யா மட்டும் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் மருத்துவர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்க்கும்படி சுகன்யாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.

வேறு வழியில்லாமல் அஜித், தனது மனைவியின் உயிரை காப்பாற்ற சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனைக்கு சுகன்யாவைக் கொண்டுச் சென்றதை அடுத்து அங்கு சுகன்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே சுகன்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தையின் உடல் நிலையும் மோசமானதால் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித் மற்றும் அவரது உறவினர்கள் WCF மருத்துவமனையில் சுகன்யாவிற்கு முறையான மருத்துவம் பார்க்காமல் தவறான சிகிச்சை அளித்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி WCF மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சுகன்யாவின் கணவர் அஜித் சாலையில் சென்ற லாரி முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உடனே பிரேக் பிடித்ததால் அஜித்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னர் அஜித் இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died for wrong treatment in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->