சட்டவிரோத கருக்கலைப்பால் உயிரிழந்த பெண் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் பெண் ஒருவர் கருவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்துள்ளார்.

அதில், கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்தது. உடனே அந்தப் பெண் கருக்கலைப்பு செய்ய முயன்றார். அப்போது அந்தப் பெண் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் உறவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர்கள் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரியும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died ilegal abortion in putukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->