ராமநாதபுரம் || பிரசவம் பார்த்த செவிலியர்கள் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் || பிரசவம் பார்த்த செவிலியர்கள் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் அருகே பறையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய சித்ராதேவி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்று கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அதன் படி சித்ராதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அவருக்கு வயிற்று வலி அதிகமாகி, அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கு, முதலுதவி சிகிச்சைப் பெற்ற பின்னர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சித்ரா தேவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த சித்ராதேவியின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பிரசவம் பார்த்ததாலேயே சித்ராதேவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த, போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died in ramanathapuram medical college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->