செங்கல்பட்டு: ஜெராக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜெராக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் காஸ்மோசிட்டி பகுதியில் சுகன்யா (38) என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை சுகன்யா கடையில் இருந்த போது திடீரென ஜெராக்ஸ் கடை தீ பற்றியது.

தீயில் சிக்கி சுகன்யா அலறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த அருண், லெனின் ஆகியோர் சுகன்யாவை மீட்க முயன்றனர். ஆனால் அப்பொழுது 3 பேரும் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.  

இதையடுத்து சிகிச்சைக்காக சுகன்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். 

மேலும் பலத்த காயமடைந்த மற்ற இரண்டு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman dies in fire at Xerox shop in Chengalpattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->