கானா இசையமைப்பாளர் மீது இளம்பெண் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்..! - Seithipunal
Seithipunal


ஆபாச படத்தை வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய கானா பாடல் இசையமைப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சால்மன் என்பவர் தன்னை காதலித்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தெரிகிறது. அது பற்றி கேட்டபோது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக மிரட்டுவதாக தெரிவித்தார்.

இதற்கு அவரது தந்தை செல்வகுமாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில், அவர் அந்த பெண்ணை மிரட்டும் ஆடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து, விசாரணை மேற்கோண்டனர்.அதில், அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.

இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman File a complaint against Gana Music director


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->