பெண் தொண்டரிடம் ரூ.2,50,000 மோசடி! சென்னை பாஜக முக்கிய புள்ளி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை : ரயில்வே நடைமேடையில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தேர்வை சேர்ந்தவர் ராமராஜன். இவர் பழைய பொருள்களை வாங்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நவமணி. தனக்கு சென்னை ரயில் நிலைய  நடைமேடையில் பெட்டிக்கடை வைக்க  உரிமம் வாங்கி தர கோரி தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் என்.எஸ்.கே தெருவை சேர்ந்த பாஜக சென்னை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமாரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கொரட்டூர் ரயில் நிலைய நடைமேடையில் தற்காலிக கடை அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே அதிகாரிகள் கடையை காலி செய்ய சொல்லி விட்டனர். இதனால் கொடுத்த பணத்தை நவமணி கேட்டதற்கு செந்தில்குமார் அநாகரிகமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நவமணி கைப்பட கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. பண மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் செந்தில் குமரை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman has BJP leader arrested for 2 lakh 50 thousand fraud


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->