சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்து பெண் காவலரின் கணவர் பலி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்து பெண் காவலரின் கணவர் பலி.!

சென்னையில் உள்ள கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சுகப்பிரியா. 4 மாத கர்ப்பிணியான இவர் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ஆனந்தராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில், சுகப்பிரியா கடந்த 13-ம் தேதி காலை தனது கணவர் ஆனந்தராஜ் உடன் இருசக்க வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். இதையடுத்து இவர்கள் வேப்பேரி ஈ.வி.ஆர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து அவர்கள் மீது விழுந்தது. 

இந்த விபத்தில் சுகப்பிரியா லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவரது கணவர் ஆனந்தராஜ் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆனந்தராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman police husband died for tree branch falling in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->