கடலூர் || பத்திரிக்கையில் பெயர் போடாத ஆத்திரம் - மணமகளின் தாய் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே ருத்ரசோலை மேலத்தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். கொத்தனாரான  இவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய மகள் சத்யகலாவுக்கு வருகிற 27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதனையொட்டி திருமண பத்திரிக்கை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 

இருப்பினும், இந்த திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாததால், இதுகுறித்து மாலதி கணவர் கமலக்கண்ணனிடம் கேட்டு சண்டை போட்டார். அப்போது இரண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த மாலதி தனது வீட்டுபின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide for no name in invitation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->