2 லட்சம் பணம் கேட்ட பெண் தாசில்தார் - போலீசார் வலையில் சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் தோட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா. பட்டதாரியான இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் உம்மு சல்மாவின் தாயார் கடந்த 2015-ம் ஆண்டு இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் சகோதரர் இறந்து விட்டனர். இதனால் சொத்தில் தந்தையின் பங்காக உம்மு சல்மாவுக்கு 36 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், அவரது பெரியப்பா வகையில் 6 சென்ட் நிலமும் எழுதி கொடுக்கப்பட்டது. அதன்படி உம்மு சல்மா மொத்தம் 42 சென்ட் நிலத்தை எல்லை வரையறை செய்வதற்காக கடந்த 17.9.2023 அன்று கூடலூர் தாசில்தார் ராஜஸ்வரியிடம், விண்ணப்பித்தார். அதற்கு ரூ.820 கட்டணமும் செலுத்தினார். ஆனால், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால் 4.3.2024 அன்று உயர்நீதிமன்றத்தில் உம்மு சல்மா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், 4-வது பிரதிவாதியாக கூடலூர் தாசில்தாரை நியமித்து உடனடியாக நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்யும்படி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றாமல் உம்மு சல்மாவிடம் தாசில்தார் ராஜேஸ்வரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டார். இதை கொடுக்காததால் ராஜேஸ்வரி உம்மு சல்மாவை அலைக்கழித்துள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத உம்மு சல்மா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தாசில்தார் ராஜேஸ்வரியை கையும், களவுமாக பிடிக்க நேற்று இரவு உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரியை சந்தித்து கொடுக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து உம்மு சல்மா லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி தாசில்தார் ராஜேஸ்வரியிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman thasildhar arrest for bribe in nilgri


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->